எத்தனையோ வேடங்களில் இதுவரை நான் நடித்திருந்தாலும், இப்போது ஒரு படத்துக்காக நான் ஏற்றிருக்கும் கர்ப்பிணி வேடம்தான் மிகப் பிடித்திருக்கிறது, என்கிறார் நயன்தாரா.
கஹானி என்ற இந்திப் படத்தை தமிழ் - தெலுங்கில் ரீமேக் செய்து வருகிறார்கள். இந்தப் படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். ஹீரோயினுக்கு மட்டுமே முக்கியத்துவம் உள்ள படம் இது.
அனாமிகா என்ற தலைப்பில் உருவாகும் இந்தப் படத்தில் வெளி நாட்டில் இருந்து இந்தியா வந்து கணவனைத் தேடும் கர்ப்பிணிப் பெண்ணாக நடிக்கிறார் நயன்தாரா.
இந்தப் பட வாய்ப்பு குறித்து நயன்தாரா கூறுகையில், "முழுக்க முழுக்க பெண்ணை மையப்படுத்திய கதை. என் கேரக்டருக்கு முக்கியத்துவம் அதிகம். இந்த வலுவான கேரக்டரில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது சந்தோஷமாக இருக்கிறது.
நான் எவ்வளவோ படங்களில் நடித்திருந்தாலும், இந்த அனாமிகா வேடம் ரொம்பப் பிடித்திருக்கிறது. ரசிகர்கள் இந்த படத்தையும் எனது கேரக்டரையும் நிச்சயம் பாராட்டுவார்கள்," என்றார்.
Post a Comment