சென்னை: மோசடி வழக்குகளில் கைதான பவர் ஸ்டார் சீனிவாசன் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார் என்று ஃபேஸ்புக்கில் செய்தி வெளியாகியுள்ளது.
பல்வேறு மோசடி வழக்குகளில் கைதான நடிகர் பவர் ஸ்டார் டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் பவர் ஜாமீனில் விடுதலையாகி இருப்பதாக ஃபேஸ்புக்கில் செய்தி வந்துள்ளது. இதையடுத்து முன்னணி நாளிதழ் ஒன்றும் அதன் இணையதளத்தில் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
தொப்பையும், தொந்தியுமாக இருந்த பவர் ஸ்லிம்மாக ஆகிவிட்டாராம். சென்னைக்கு வந்த மனிதர் தனது ஸ்டைலில் ரவுசு பேட்டி ஒன்றை வேறு கொடுத்துள்ளாராம்.
பேட்டியில் அவர் கூறுகையில்,
சிறை எனக்கு ஆசிரமம் போன்று இருந்தது. அங்கு பணிபுரியும் தமிழக போலீசார் என்னைப் பார்த்ததும் மகிழ்ச்சி அடைந்தார்கள். தற்போது அவர்கள் எல்லாம் என் ரசிகர்கள். நான் சிறை சென்ற காலத்தில் கோலிவுட் என்னை மிஸ் பண்ணி இருக்கும். என் படமான ஆனந்த தொல்லை தீபாவளிக்கு ரிலீஸாகும். நான் சிறைக்கு சென்றது சிலர் செய்த சதி. இந்த பிரச்சனைகளில் இருந்து நிச்சயம் மீண்டும் வருவேன் என்றாராம்.
Post a Comment