பத்தாண்டு நடிப்புக்காக த்ரிஷாவுக்கு சிமா விழாவில் விருது!

|

சென்னை: பத்தாண்டுகளாக தமிழ் சினிமாவில் நடித்து வரும் த்ரிஷாவை கவுரவிக்க, சிமா விருது வழங்கும் விழாவில் விருது வழங்கப்படுகிறது.

தென்னிந்திய சர்வதேச சினிமா விருது (சிமா - SIIMA) வழங்கும் விழா இந்த ஆண்டு செப்டம்பர் 12 மற்றும் 13-ம் தேதி ஐக்கிய அரசு எமிரேட்ஸில் நடக்கிறது.

பத்தாண்டு நடிப்புக்காக த்ரிஷாவுக்கு சிமா விழாவில் விருது!  

இந்திய சினிமா தனது 100-வது ஆண்டைக் கொண்டாடும் இந்த தருணத்தில், சினிமாவில் சிறப்பான பங்காற்றிய கலைஞர்களை கவுரவிக்கிறது இந்த விழா.

அந்த வகையில் தென்னிந்திய சினிமாவில் கடந்த 10 ஆண்டுகளாக நடித்து வரும் த்ரிஷாவை கவுரவிக்க முடிவு செய்துள்ளது விழாக் குழு.

இந்த விழாவில் நேரில் பங்கேற்று விருதினைப் பெற்றுக் கொள்கிறார் த்ரிஷா.

இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்த த்ரிஷா கூறுகையில், "இதை மிகவும் உயர்ந்த கவுரவமாக கருதுகிறேன். வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டு எனக்குத் தரப்படும் விருது இது. நிச்சயம் நேரில் சென்று பெற்றுக் கொள்வோம். இந்த நேரத்தில் எனக்கு பெரும் ஆதரவாக இருக்கும் அம்மாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார்.

 

Post a Comment