தீபாவளிப் படங்கள்... யு சான்றிதழ் இல்லாவிட்டால் திரையிட மாட்டோம்!- திரையரங்குகள்

|

சென்னை: யு சான்றிதழோடு வரும் படங்களுக்கு மட்டுமே இனி முன்னுரிமை. ஏ மற்றும் யு ஏவுடன் படங்களை தீபாவளிக்கு திரையிட மாட்டோம், என்று திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

இப்போதெல்லாம் முன்னணி ஹீரோக்களின் படங்கள் அல்லது பிரச்சினைக்குரிய படங்களைத் திரையிடுவதில் பல்வேறு பிரச்சினைகள் எழுகின்றன.

தீபாவளிப் படங்கள்... யு சான்றிதழ் இல்லாவிட்டால் திரையிட மாட்டோம்!- திரையரங்குகள்

அரசியல் ரீதியான அல்லது பாதுகாப்புக் காரணங்களால் உலகெங்கும் ரிலீசாகிற படங்கள் தமிழகம் மற்றும் புதுவையில் மட்டும் வெளியாகாமல் போகின்றன.

வருகிற தீபாவளிக்கு முன்னணி நடிகர்களின் படங்கள் 5 முதல் 7 வரை வெளியாகும் வாய்ப்பு உள்ளது.

இந்தப் படங்களுக்கு தியேட்டர்களை ஒப்பந்தம் செய்யும் வேலையை இப்போதே ஆரம்பித்துள்ளனர்.

ஆனால் இப்போது சில நிபந்தனைகளின் அடிப்படையிலேயே படத்தைத் திரையிட முடியும் என திரையரங்க உரிமையாளர்கள் திட்டவட்டமாகக் கூறிவிட்டனர்.

அதில் முதல் நிபந்தனை, படத்தில் எந்த சர்ச்சைக்குரிய காட்சிகள் - வசனங்கள் இருக்கக் கூடாது.

இரண்டாவது, இந்த தீபாவளிக்கு வரும் படங்களில் சென்சாரில் யு சான்றுடன் வரும் படங்களை மட்டுமே திரையிட அனுமதிப்போம். யுஏ, ஏ சான்றுள்ள படங்களுக்கு தியேட்டர்கள் தர மாட்டோம்.

தீபாவளிக்கு ஒரு வாரத்துக்கு முன்பே படங்களின் சென்சார் சான்றிதழை தயாரிப்பாளர்கள் அல்லது வெளியீட்டாளர்கள் தந்தாக வேண்டும்.

-இந்த தீபாவளிக்கு வரும் எல்லாப் படங்களும் யு சான்றிழ் பெற்றுவிடுமா... பார்க்கலாம்!

 

Post a Comment