ஸ்பாட்டில் கடும் வாக்குவாதம்: அஜீத்தின் 'வீரம்' ஷூட்டிங் ரத்து

|

ஹைதராபாத்: ஆந்திர பிரதேச ஸ்டண்ட் யூனியன் உறுப்பினர்களுக்கும், வீரம் படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

ஸ்பாட்டில் கடும் வாக்குவாதம்: அஜீத்தின் 'வீரம்' ஷூட்டிங் ரத்து

அஜீத் குமார், தமன்னா நடிக்கும் வீரம் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் ஸ்டுடியோவில் நடந்து வருகிறது. படத்தின் முக்கியமான சண்டை காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது ஆந்திர மாநில ஸ்டண்ட் யூனியன் உறுப்பினர்கள் அங்கு வந்தனர். ஆந்திராவில் படப்பிடிப்பு நடத்தினால் உள்ளூர் ஆட்களையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற விதிமுறையை ஏன் பின்பற்றவில்லை என்று கேட்டனர்.

உடனே ஸ்டண்ட் மாஸ்டர் சில்வாவுக்கும், யூனியன் ஆட்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. நிலைமை கையை மீறிப் போக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. இந்த பிரச்சனை தீர்வது போன்று தெரியாதாதல் அஜீத், தமன்னா வரும் காட்சிகளை படமாக்குவது என்று இயக்குனர் சிவா திட்டமிட்டார்.

 

Post a Comment