சென்னை: செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இரண்டாம் உலகம் படம் வரும் 22-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.
இந்தப் படத்துக்கு தணிக்கைக் குழுவினர் யு சான்று வழங்கியுள்ளனர்.
ஆர்யா, அனுஷ்கா நடித்துள்ள ‘இரண்டாம் உலகம்' கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக தயாரிப்பிலிருந்தது. கற்பனை உலகைச் சித்தரிக்கும் வித்தியாசமான படமாக இதனை எடுத்துள்ளார் செல்வராகவன். பாடல்களுக்கு மட்டும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, பின்னணி இசையை அனிருத் அமைத்துள்ளார்.
இந்நிலையில், சான்றிதழ் பெறுவதற்காக தணிக்கை துறையினருக்கு இப்படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர் இப்படத்திற்கு ‘யு‘ சான்றிதழ் வழங்கியுள்ளனர். மேலும், வித்தியாசமான கதைக் களத்துடன் படத்தை எடுத்துள்ள படக்குழுவினரையும் பாராட்டியுள்ளனர்.
செல்வராகவனின் படம் யு சான்று பெறுவது இதுவே முதல்முறை.
தமிழ், தெலுங்கு (வர்ணா) என இரண்டு மொழிகளிலும் வரும் நவ.22-ந் தேதி வெளியிடவுள்ளனர்.
Post a Comment