தீபாவளிக்கு வெளியான படங்களில் பாராட்டுகளையும், கடந்த இரு தினங்களாக வசூலையும் குவிப்பதில் முதலிடம் வகிக்கிறது பாண்டிய நாடு. கிட்டத்தட்ட 250 அரங்குகளுக்கு மேல் வெளியான இந்தப் படம், கடந்த 4 தினங்களாக நல்ல வசூலைப் பெற்று வருகிறது.
வார நாட்களிலும் கூட 90 சதவீத ரசிகர்கள் வருவதால், இந்தப் படத்துக்கு கூடுதலாக அரங்குகளைத் தர தியேட்டர்காரர்கள் முன்வந்துள்ளனர். இதுவரை 75 அரங்குகள் இந்தப் படத்துக்குக் கூடுதலாகக் கிடைத்துள்ளன.
அந்த வகையில் இந்த தீபாவளிக்கு அதிக அரங்குகளில் வெளியாகியுள்ள படம் என்ற பெருமையும் பாண்டிய நாட்டுக்கு கிடைத்துள்ளது.
கேரளாவில் பாலக்காட்டில் இந்தப் படம் வெளியாகியுள்ளது. இங்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பைப் பார்த்து, கேரளா முழுவதும் படத்தை இந்த வாரம் வெளியிட்டுள்ளனர்.
தமிழகம் தவிர, ஆந்திரா மற்றும் கர்நாடகத்தில் பாண்டிய நாடு பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது, தயாரிப்பாளரும் ஹீரோவுமான விஷாலுக்கு பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது.
Post a Comment