சிம்புவின் வேட்டை மன்னன் ட்ராப்?

|

சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட வேட்டை மன்னன் படம் கைவிடப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நடிகர் சிம்பு ‘வாலு', ‘வேட்டைமன்னன்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இரண்டிலுமே அவருக்கு ஜோடி ஹன்சிகா. இரண்டு படங்களும் வெளியாகுமா என்றே தெரியாத குழப்ப நிலை நீடித்து வருகிறது.

இதில் வாலு படம் கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தைத் தொட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள்.

சிம்புவின் வேட்டை மன்னன் ட்ராப்?

ஆனால் ‘வேட்டை மன்னன்' படம் குறித்து சொல்ல ஒன்றுமே இல்லை. அதாவது இன்னும் ஆரம்பக்கட்டத்தையே தாண்டவில்லை இந்தப் படம்.

புதுமுக இயக்குனர் நெல்சனோ இந்தப் படம்தான் தனக்கு வாழ்க்கையே என்று கூறிக் கொண்டிருந்தார். அப்போதும் ஷூட்டிங் தொடங்கவில்லை. தயாரிப்பாளரால்தான் இந்த இழுபறி என சிம்பு தரப்பும், சிம்புவால்தான் இந்த நிலை என தயாரிப்பாளர் தரப்பும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், சிம்பு பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். எனவே, இனியும் வேலைக்காகாது என்பதைப் புரிந்து கொண்ட நெல்சன் தன்னுடைய அடுத்தப் படத்துக்கு தயாராகிவிட்டார். இதுகுறித்து வெளிப்படையாக அறிவித்துவிட்டு சிம்பு படத்திலிருந்து கழன்று கொள்ளப் போகிறாராம் அவர்.

 

Post a Comment