சென்னை: அசால்டாக பரோட்டா சாப்பிடும் காட்சி மூலம் பிரபலமான நகைச்சுவை நடிகர் ஒரு நாளைக்கு ரூ. 3 லட்சம் சம்பளம் கேட்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஒரு படத்தில் அசால்டாக 50 பரோட்டாவை சாப்பிட்டு நம்மை எல்லாம் அசர வைத்தவர் அந்த காமெடி நடிகர். இதையடுத்து அவர் பெயருக்கு முன்பு பரோட்டா ஒட்டிக் கொண்டது.
தற்போது முன்னணி நகைச்சுவை நடிகராக உள்ள சந்தன நடிகர் ஓவர் பிசியாக உள்ளார். மேலும் நாள் ஒன்றுக்கு ஏகப்பட்ட சம்பளமும் கேட்கிறாராம். இதனால் சந்தன நடிகரின் கால்ஷீட் கிடைக்காதவர்கள் பரோட்டாவை தேடிப் போகிறார்களாம். தனது மார்க்கெட் பிக்கப்பானதை உணர்ந்த பரோட்டா நடிகர் சம்பளத்தை உயர்த்திவிட்டதாகக் கூறப்படுகிறது.
மனிதர் ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் வாங்கிக் கொண்டிருந்தார். ஆனால் தற்போதோ ரூ.3 லட்சம் கேட்கிறாராம். மார்க்கெட் இருக்கும்போது தானே சம்பளத்தை உயர்த்தி கேட்க முடியும்.
Post a Comment