பால் வாக்கர் மரணம்: ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் 7 ஷூட்டிங் நிறுத்தம்

|

லாஸ் ஏஞ்சல்ஸ்: பால் வாக்கரின் திடீர் மரணம், அவர் நடித்துக் கொண்டிருந்த ஃபாஸ்ட் அன்ட் ப்யூரியஸ் படத்தின் 7-ம் பாக வெளியீட்டை பாதித்துள்ளது.

படத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ள யுனிவர்சல் ஸ்டுடியோ, பால் வாக்கரின் குடும்பத்தினருடன் பேசிய பிறகு, படத்தை தொடர்வது குறித்து முடிவெடுக்கப் போவதாக அறிவித்துள்ளது.

பால் வாக்கர் மரணம்: ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் 7 ஷூட்டிங் நிறுத்தம்

புகழ்பெற்ற ஹாலிவுட் பட சீரிஸ் இந்த ஃபாஸ்ட் அன்ட் ப்யூரியஸ். இதன் முதல் பாகத்திலிருந்து நடித்து வந்தார் பால் வாக்கர்.

இப்போது அந்தப் படத்தின் 7-ம் பாகம் படமாக்கப்பட்டு வந்தது. அந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருந்த போதுதான், பால் வாக்கர் கடந்த நவம்பர் 30 ம் தேதி கார் விபத்தில் அகால மரணமடைந்தார்.

படத்தின் பெரும்பகுதி படமாக்கப்பட்டுவிட்டது. ஆனால் பால் வாக்கர் நடிக்க வேண்டிய சில காட்சிகள் இன்னும் படமாக்கப்படவில்லை. ஃபாஸ்ட் அன்ட் ப்யூரியஸ் 7 ஐ ஜூலையில் வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில்தான் பால் வாக்கர் விபத்தில் மரணமடைந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர்கள், படப்பிடிப்பை முழுமையாக ரத்து செய்துவிட்டனர். பால் வாக்கரின் குடும்பத்தாருடன் பேசிய பிறகே இறுதி முடிவை மேற்கொள்வதாக அறிவித்துள்ளனர். இதனால் இந்தப் படத்தின் வெளியீடு தள்ளிப் போகும் எனத் தெரிகிறது.

பால் வாக்கர் இறப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்புதான், இந்தப் படத்திலிருந்து ஒரு வீடியோ காட்சி லீக் ஆகியிருந்தது. அதில் பால் வாக்கர் ஒரு சவ ஊர்வலத்தில் சக நடிகர்கள் லுடாக்ரிஸ், டைரிஸ் கிப்சனுடன் நடந்து போவது போல காட்சி இடம்பெற்றிருந்தது.

ஒரு வாரத்தில், அதேபோன்ற சவ ஊர்வலம்... ஆனால் இந்த முறை சவமாக பால் வாக்கரே இருந்ததை, அவரது தந்தை கண்ணீருடன் நினைவு கூர்ந்தார்.

 

+ comments + 1 comments

13 November 2015 at 14:51

I am sad

Post a Comment