போனில் செக்ஸ் தொல்லை- தவிர்க்க நடிகை சஞ்சனா செய்த பலே டெக்னிக்!

|

பெங்களூர்: கன்னடப் படவுலகில் பிரபலமான நடிகை சஞ்சனாவுக்கு போனில் செக்ஸ் தொல்லை கொடுத்த நபரை, அவர் நூதனமான முறையில் பழி வாங்கினார்.

சஞ்சனாவுக்கு ஏராளமான ரசிகர்கள் கன்னடத்தில். சஞ்சனாவுக்கு மர்ம ஆசாமி ஒருவன் தினமும் செக்ஸ் தொல்லை கொடுத்து வந்தான்.

போனில் செக்ஸ் தொல்லை- தவிர்க்க நடிகை சஞ்சனா செய்த பலே டெக்னிக்!

(சஞ்சனா படங்கள்)

நள்ளிரவில் மொபைல் போனில் சஞ்சனாவிடம் ஆபாசமாக பேசி இம்சை செய்து வந்தான். இதில் நிம்மதி இழந்த சஞ்சனா, ஒரு கட்டத்தில் அவன் நம்பர் வரும்போது பேசாமல் தவிர்த்துப் பார்த்தார். ஆனாலும் அந்த நபர் வீட்டின் மற்ற போன் நம்பர்கள் மூலம் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசி வந்தான்.

போலீசிடம் புகார் அளிக்காமல், அந்த நபரை நூதனமாக பழி வாங்க சஞ்சனா திட்டமிட்டார்.

அதன்படி செக்ஸ் தொல்லை கொடுத்தவனின் மொபைல் போன் நம்பரை ட்விட்டரில் வெளியிட்டார். 'இந்த போன் நம்பருக்குரிய நபர் தினமும் நள்ளிரவில் எனக்கு போன் செய்து ஆபாசமாக பேசி தொல்லை கொடுக்கிறார். எனது உண்மையான ரசிகர்கள் அந்த நபருக்கு தக்க பாடம் புகட்டுங்கள்' என்று அன்புக்கட்டளை வேறு போட்டிருந்தார்.

உடனடியாக ரசிகர்கள் அந்த போனில் தொடர்பு கொண்டனர். மர்ம நபரை கேவலமான வார்த்தைகளால் திட்டி தீர்த்திருக்கிறார்கள். கொலை மிரட்டலும் விடுத்தார்களாம். இதனால் ஆபாசமாக பேசி வந்த நபர் பயந்துபோய் சஞ்சனாவுக்கு போன் செய்து ‘என்னை மன்னித்து விடுங்கள்' இனிமேல் ஆபாசமாக பேசமாட்டேன் என் மொபைல் நம்பரை ட்விட்டரில் இருந்து நீக்கி விடுங்கள்," என்று கெஞ்சி வருகிறாராம். ஆனால் அந்த நம்பரை நீக்குவதா வேண்டாமா என்று சஞ்சனா யோசித்து வருகிறாராம்.

 

Post a Comment