'சோன்பப்டி'யோடு வரும் புது இளம் பெண் இயக்குநர் சிவாணி!

|

'சோன்பப்டி'யோடு வரும் புது இளம் பெண் இயக்குநர் சிவாணி!

சிவாணி... தமிழ் சினிமாவுக்கு புதிதாக வந்திருக்கும் இன்னொரு இளம் பெண் இயக்குநர்.

அதுவும் சினிமாவை ஒரு உதவி இயக்குநராக இருந்தெல்லாம் கற்றுக் கொள்ளாமல், நேரடியாக கேள்வி ஞானம் மூலமே கற்று களமிறங்கியிருக்கிறார் இந்த மதுரைக்காரப் பொண்ணு! எஞ்ஜினியரிங் பட்டதாரி.. கோல்ட் மெடலிஸ்ட்.

படித்த படிப்பை வைத்து வேலை தேடாமல், எப்போதும் பரபரப்பாக ஏதாவது ஒரு பணியை ரசித்து செய்ய வேண்டும் என்று ஆசையாம் சிவாணிக்கு. தாத்தா ஜீவரத்னம் ஒரு சினிமா தயாரிப்பாளர். அம்மாவோ கதாசிரியர்.

பிறகென்ன... சினிமா ரூட்டையே பிடித்துவிட்டார். அம்மா எழுதிய ஒரு கதையை சோன்பப்டி என்ற பெயரில் படமாக்குகிறார் சிவாணி.

'யாரிடமாவது போய்த்தான் சினிமா கற்க வேண்டும் என்றில்லை சார். நான் நேரடியாக பல இயக்குநர்களிடம் பேசியிருக்கிறேன். அந்த அறிவைக் கொண்டே படமும் எடுத்தேன். காட்சிகளைப் பார்த்த என் எடிட்டர் தணிகாசலம்... அட அறிமுக இயக்குநர் மாதிரியே இல்லையேம்மா," என்று ஆச்சர்யப்பட்டார்.

இது போதாதா?" என்கிறார் சிவாணி.

கதை எழுதியதோடு, மகள் இயக்கும் படத்தைத் தயாரிக்கவும் செய்கிறார் சிவாணியின் அம்மா.

இந்தப் படத்தில் வழக்கு எண், ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படங்களில் நடித்த ஸ்ரீ ஹீரோவாக நடிக்கிறார். நிரஞ்சனா ஹீரோயின்.

கதை என்ன என்று கேட்டால், "படம் மிகவும் சுத்தமான ஒரு குடும்ப பொழுதுபோக்குப் படமாக இருக்கும். அடிதடி, சண்டை.. அட ஒரு கொசுவைக் கொல்லும் அளவுக்குக் கூட வன்முறை இல்லாமல் இருக்கும்ங்க," என்கிறார் சிவாணி.

நல்லது.. வாழ்த்துகள்!

 

Post a Comment