இயக்குனர் சரண் புண்ணியத்தில் தமிழில் மேலும் 3 கதாநாயகிகள் அறிமுகம்!

|

சென்னை: தமிழ் சினிமாவில் காலம்காலமாக கதாநாயகிகளை கலைச் சேவைக்கு அறிமுகப்படுத்துவது ஒன்றும் புதிதல்ல.

அதுவும் அந்த முக்கிய பொறுப்பினை பெரும்பாலும் இயக்குநர்கள்தான் செய்து வருகின்றார்கள். வழக்கமாக கேரளாவிலிருந்து இறக்குமதி செய்வார்கள். மும்பையும் பல நடிகைகளை இறக்குமதி செய்த புண்ணியம் பெற்ற நகரம்தான்.

இயக்குனர் சரண் புண்ணியத்தில் தமிழில் மேலும் 3 கதாநாயகிகள் அறிமுகம்!

அந்த வகையில் கடமை தவறாமல் இயக்குநர் சரண் தயாரித்து, இயக்கும் தன்னுடைய புதிய படமான "ஆயிரத்தில் இருவர்" படத்தில் முத்தான மூன்று புத்தம்புது இளம் கதாநாயகிகளை களமிறக்கி உள்ளார்.

தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருந்த சாக்‌ஷி செளத்ரி என்ற நாயகிக்கு சாமுத்ரிகா என்று பெயர் மாற்றிவிட்டார். கன்னட படங்களின் நடித்து வந்த சுரபிக்கு ஸ்வஸ்திகா என்று பெயர் மாற்றி களமிறக்கி உள்ளார்.

மூன்றாவதான கேஷா கம்பெட்டி என்பவரின் பெயரை மட்டும் மாற்றாமல் அப்படியே நடிக்கவைத்துவிட்டார்.

மொத்ததில் தமிழ் சினிமாவிற்கு மேலும் மூன்று அழகு மயில்களை அறிமுகப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் புண்ணியத்தை வாங்கி கட்டிக் கொண்டுள்ளார் இயக்குனர் சரண்.

இவர்களுக்கு தமிழ் பேசத் தெரியுமா அல்லது "டமில் பேஸ்த் தெர்மா" என்பது தெளிவாகத் தெரியவில்லை.

 

Post a Comment