ரஜினி - ஷங்கரின் எந்திரன் 2 அறிவிப்பு எப்போது?

|

ஐ படத்தின் வெளியீட்டுக்குப் பிறகுதான் எந்திரன் 2 பற்றிய அறிவிப்பை வெளியிட ஷங்கரும் ரஜினியும் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

விக்ரம் - எமி நடிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையில் இரண்டு ஆண்டுகளாக ஐ படத்தை உருவாக்கி வருகிறார் இயக்குநர் ஷங்கர்.

ரஜினி - ஷங்கரின் எந்திரன் 2 அறிவிப்பு எப்போது?

இந்தப் படம் ரூ 150 கோடி பட்ஜெட்டில் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. படத்தை கடந்த ஏப்ரல் மாதமே வெளியிடத் திட்டமிட்டனர். ஆனால் முடியவில்லை. இன்னும் இசை வெளியீட்டுத் தேதியைக் கூட உறுதியாக அறிவிக்கவில்லை.

இந்த நிலையில், இயக்குநர் ஷங்கர் தனது அடுத்த பட வேலைகளை ஆரம்பித்துவிட்டார். ரஜினியை வைத்து எந்திரன் 2 படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தின் கதையை ரஜினிக்குச் சொல்லி அனுமதியும் பெற்றுவிட்டார். ரஜினியும் லிங்கா படத்தின் இறுதிக் கட்டத்தில் இருக்கிறார். டிசம்பர் 12-ல் அந்தப் படம் வெளியாகிறது.

அதற்குள் ஐ படத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரன் வெளியிட்டுவிட்டால், அதைத் தொடர்ந்து எந்திரன் 2 படத்தின் அறிவிப்பை வெளியிடலாம் என முடிவு செய்துள்ளாராம் ஷங்கர்.

தீபாவளிக்கு ஐ படத்தை வெளியிட தீவிர முயற்சிகள் நடக்கின்றன.

 

Post a Comment