தனுஷ் - வெற்றி மாறன் இணைந்து தயாரித்துள்ள காக்கா முட்டை படம் டொரண்டோ சர்வதேசப் பட விழாவுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மணிகண்டன் இயக்கத்தில், புதுமுகம் பேபி ஆன்டனி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ள படம் காக்கா முட்டை.
தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸும் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் பிலிம் கம்பெனியும் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
தயாரிப்பிலிருக்கும்போதே படம் குறித்து நல்ல அபிப்பிராயங்கள் வெளியாகின.
இந்த நிலையில் கனடாவின் டொரன்டோ நகரில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட இந்தப் படத்தைத் தேர்வு செய்துள்ளனர்.
வரும் செப்டம்பர் 4-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை இந்த திரைப்பட விழா நடக்கிறது. பல நாடுகளிலிருந்தும் ஏராளமான படங்கள் இதில் கலந்து கொள்கின்றன.
தமிழகத்தில் படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.
தனுஷ் நடிக்க, வெற்றிமாறன் இயக்கத்தில் 2011-ல் வெளியான ஆடுகளம் படம் ஏற்கெனவே இந்த சர்வதேசப் பட விழாவில் பங்கேற்றது நினைவிருக்கலாம்.
Post a Comment