13 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் குரோசவா திரைப்பட விழா

|

உலகப் புகழ் பெற்ற ஹாலிவுட் இயக்குநர் அகிரா குரோசவா திரைப்பட விழா 13 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் தொடங்கியது.

செவ்வாய்க்கிழமை தொடங்கிய இந்த விழா வரும் ஞாயிற்றுக் கிழமை வரை சென்னை கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள எடிட்டர் மோகனுக்குச் சொந்தமான எம்எம் தியேட்டரில் நடக்கிறது.

அகிரா குரோசவா இயக்கிய செவன் சாமுராய், ரெட்பிரட், ரேஷ்மோன், ஹய் அன்டு லோ, ஓய்ஜெம்போ, சஞ்ரோ, தி துரோன் அஃப் பிலட், இக்கிரூ ஆகிய 8 திரைப்படங்களை இந்தத் திரைப்பட விழாவில் காணலாம்.

தினமும் மாலை 6 மணிக்கு படங்கள் திரையிடப்படுகின்றன.

இப்பட விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் தென் இந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் சசிகுமார், தி ஜப்பான் பவுண்டேஷன் அமைப்பின் தலைவர் மசநோரி நகானோ, தெலுங்கு திரைப்பட நடிகை ரேஷ்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அகிரா குரோசவாவின் பெயரில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் இத் திரைப்பட விழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. சென்னையில் உள்ள ஜப்பான் தூதரகம் இந்த விழாவை ஏற்பாடு செய்துள்ளது.

 

Post a Comment