'கோட்டையெல்லாம் அழிடா.. திரும்ப மொதல்லருந்து ஆரம்பிக்கலாம்!'

|

தேசிய விருதெல்லாம் வாங்கிய இயக்குநர்தான்.. பார்க்க பரம சாதுவாகத்தான் தெரிவார். ஆனால் இயக்குநராக அவர் பண்ணும் அட்ராசிட்டி தாங்காமல் புலம்புகிறார்கள் படத்தில் நடிப்பவர்களும் சக டெக்னீஷியன்களும்.

அவர் போன வருஷம் ஆரம்பித்த அந்தப் புதிய படத்துக்கு எப்போதோ பாடல்கள் தயாராகிவிட்டன. படப்பிடிப்பும் தொடங்கிவிட்டதாகத்தான் சொன்னார்கள். ஒரு மாதம் படப்பிடிப்பு முடிந்து, எடுத்ததைப் போட்டுப் பார்த்தவருக்கு திருப்தி வரவில்லையாம்.

'டேய்.. இது சரியா வரலடா.. திரும்ப கெட்டப்பை மாத்தி வேற மாதிரி எடுக்கலாம்'
என ஹீரோவாக நடிக்கும் தன் சிஷ்யப் பிள்ளையிடம் உரிமையுடன் கூற, விழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல் தவிக்கிறாராம் ஹீரோ.

இந்தப் படத்துக்காக மேக்கப், பாடி லாங்குவேஜை மாற்ற பட்ட பாடு ஒரு பக்கம், பிஸியான ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தவரை இந்தப் படத்தில் முடக்கியதால் ஏற்பட்ட வருமான இழப்பு மறுபக்கம்.

என்ன செய்வதென கை பிசைகிறாராம் நடிகர்!

 

Post a Comment