பிரசாந்தை ஹீரோவாக வைத்து ஸ்பெஷல் 26 இந்திப் படத்தை நான்கு மொழிகளில் இயக்குகிறார் தியாகராஜன்.
பிரசாந்தை வைத்து இப்போது சாஹசம் என்ற பிரமாண்ட படத்தை எடுத்து வருகிறார் தியாகராஜன். இப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது.
இந்நிலையில், இந்தியில் கங்கனா ரணாவத் நடித்து சூப்பர் ஹிட்டான ''குயின்'' படத்தின் ரீ-மேக் உரிமையை வாங்கி யுள்ளார் தியாகராஜன். இப்போது பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான மற்றொரு படமான ''ஸ்பெஷல்-26'' படத்தின் ரீ-மேக் உரிமையையும் வாங்கியுள்ளார்.
அக்ஷ்ய் குமார், அனுபம் கெர், மனோஜ் பாஜ்பாய் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த இப்படம் பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்க பெரும் போட்டி நடந்த நிலையில், தியாகராஜன் வாங்கினார். இப்படத்தை அவரே இயக்கவும் உள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரீ-மேக் செய்கிறார்.
''ஸ்பெஷல்-26'' தமிழ் ரீ-மேக்கில் பிரஷாந்த் நடிக்கிறார், அவருடன் சத்யராஜ், மனோஜ் பாஜ்பாய் ஆகியோரும் நடிக்க உள்ளனர்.
Post a Comment