காமெடி நடிகர் மகாதேவன் மரணம்... திரையுலகினர் அஞ்சலி

|

காமெடி நடிகர் மகாதேவன் நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது 45.

தமிழில் காமெடி இரட்டையர்களாக நடித்து வந்தவர்கள் சகாதேவன், மகாதேவன். இரட்டைப் பிறவிகள்.

இவர்கள் இருவரும் இணைந்து ‘தேவர் மகன்', ‘ரோஜா கூட்டம்', ‘கோயம்பத்தூர் மாப்ளே' உட்பட பல படங்களில் நடித்துள்ளனர். அதோடு ஏராளமான சின்னத்திரை நாடகங்களிலும் நடித்துள்ளனர்.

காமெடி நடிகர் மகாதேவன் மரணம்... திரையுலகினர் அஞ்சலி

இவர்களில் சகாதேவன் கடந்த ஆண்டு மாரடைப்பு காரணமாக காலமான நிலையில் நேற்று அவரது மற்றொரு சகோதரரான மகாதேவனும் மரணமடைந்தார். கடந்த சில மாதங்களாகவே சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த மகாதேவன் அதற்கான சிகிச்சையும் பெற்று வந்திருக்கிறார்.

பத்து நாட்களுக்கு முன் கூட சிகிச்சைக்காக அவரது வலது கால் அகற்றப்பட்டது.

காமெடி நடிகர் மகாதேவன் மரணம்... திரையுலகினர் அஞ்சலி  

தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் மகாதேவன் நேற்று மாலை மருத்துவமனையிலேயே சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். மறைந்த மகாதேவனுக்கு சாந்தி என்ற மனைவியும், அன்பரசி (16) என்ற மகளும் உள்ளனர்.

அவரது உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர்.

 

Post a Comment