செஞ்சு காட்டிட்டீங்க...: விஷாலைப் பாராட்டிய விஜய்

|

திருட்டு விசிடிக்கு எதிராக களமிறங்கிய விஷாலுக்கு திரையுலகில் பாராட்டுகள் குவிகின்றன. இப்போது நடிகர் விஜய்யும் தன் பங்குக்கு விஷாலைப் பாராட்டியுள்ளார்.

திருட்டு விசிடியை ஒழிப்பதில் போலீஸை மட்டும் நம்பிக்கொண்டிருப்பதில் பிரயோசனமில்லை என்று உணர்ந்து முதலில் களமிறங்கியவர் இயக்குநர் நடிகர் பார்த்திபன். தன் படத்தோடு வெளியான மற்ற படங்களின் திருட்டு விசிடியையும் பிடித்துக் கொடுத்து பரபரப்பு கிளப்பினார். குடைக்குள் மழை சமயத்திலிருந்தே இதனைச் செய்து வருகிறார் அவர்.

செஞ்சு காட்டிட்டீங்க...: விஷாலைப் பாராட்டிய விஜய்

சமீபத்தில் அவரது கதை திரைக்கதை வசனம் இயக்கம் பட வெளியீட்டின் போது, பர்மா பஜார், அண்ணா நகர் உள்பட பல இடங்களில் தானே நேரடி ஆக்ஷனில் இறங்கிய பார்த்திபன் திருட்டு விசிடி விற்பவர்களைப் பிடித்துக் கொடுத்தார்.

அவரது வழியில் விஷாலும் சமீபத்தில் களமிறங்கினார். தனது தீபாவளி வெளியீடான பூஜை, மற்றும் விஜய்யின் கத்தி பட சிடிக்கள் விற்றவர்களை கையும் களவுமாகப் பிடித்துக் கொடுத்தார்.

அவரது இந்த செயலுக்கு திரையுலகினர் பாராட்டு தெரிவித்துள்ளனர். நடிகர் விஜய்யும் தன் பங்குக்கு பாராட்டியுள்ளார்.

அவர் விஷாலுக்கு அனுப்பிய ட்வீட்டில், " பெருமையாக உள்ளது விஷால். பேசிக் கொண்டிருப்பதைவிட, செயலில் காட்டுவதுதான் சிறந்தது என நிரூபித்துவிட்டீர்கள். திருட்டு விசிடியை ஒழிப்போம்," என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார் விஷால்.

 

Post a Comment