பண்ணையாரும் பத்மினியும் புது இயக்குநரின் மகிழ்ச்சியும்!

|

பண்ணையாரும் பத்மினியும் தலைப்பு அறிவிக்கப்பட்ட போதே பெரிய எதிர்ப்பார்ப்பு கிளம்பியது. படமும் நன்றாக இருந்தது.

ஆனால் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகவில்லை படம். அந்தக் குறையைத் தீர்க்கும் விதமாக படத்துக்கு சர்வதேச அளவிலான அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இந்த ஆண்டு கேரளாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவுக்கு தமிழிலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள ஒரே படம் என்ற பெருமை பண்ணையாரும் பத்மினியும் படத்துக்குக் கிடைத்துள்ளது.

பண்ணையாரும் பத்மினியும் புது இயக்குநரின் மகிழ்ச்சியும்!

இந்த தேர்வானது, படத்தின் இயக்குநர் அருண் குமாரை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "வழக்கமா இந்த சர்வதேச திரைப்பட விழாவில் 10 படங்களைத் தேர்ந்தெடுப்பாங்க. இந்த முறை 7 படங்கள்தான் தேர்வாகியிருக்கு. அதுல ஒரே தமிழ்ப் படம் பண்ணையாரும் பத்மினியும்தான்னு நினைக்கும்போதே ரொம்ப பெருமையா இருக்கு. ஒரு படைப்பாளிக்கு தேவையானதே அங்கீகாரம்தானே. அது இப்ப தொடர்ந்து கிடைக்கும்போது ரொம்பவே சந்தோஷமா இருக்கு. ஹாலிவுட் இயக்குநர்கள் பலரும் இந்தத் திரைப்பட விழாவுல கலந்துக்கப் போறாங்க... எனக்கு நிறைய அனுபவங்கள் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன்," என்றார்.

அடுத்து ஆக்ஷன் படம் பண்ணுகிறார் அருண். அதிலும் ஹீரோ விஜய் சேதுபதிதானாம்!

 

Post a Comment