மும்பை: ஹேப்பி நியூ இயர் சுத்த நான்சென்ஸ் படம் என்று ஜெயா பச்சன் தெரிவித்ததற்கு அவரது கணவர் அமிதாப் பச்சன், மகன் அபிஷேக், மருமகள் ஐஸ்வர்யா ஆகியோர் ஷாருக்கானிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர்.
ஷாருக்கான், அபிஷேக் பச்சன், தீபிகா படுகோனே நடித்த ஹேப்பி நியூ இயர் படம் உலக அளவில் ரூ.300 கோடி வசூல் செய்துள்ளது. இந்நிலையில் அந்த படத்தை சுத்த நான்சென்ஸ் என்று நடிகை ஜெயா பச்சன் விமர்சித்துள்ளார்.
ஜெயா பச்சன் இப்படி தெரிவித்ததை கேட்டு ஹேப்பி நியூ இயர் குழு கடுப்பானது, பச்சன் குடும்பத்தார் அதிர்ச்சி அடைந்தனர். அமிதாப் பச்சன் தனது மனைவியின் கருத்துக்காக மன்னிப்பு கேட்டு ஷாருக்கானுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினார்.
அபிஷேக் பச்சன் தனது மனைவி ஐஸ்வர்யா ராயை அழைத்துக் கொண்டு நேராக ஷாருக்கானின் வீடான மன்னத்துக்கு சென்றார். ஆனால் அங்கு ஷாருக்கான் இல்லாததால் அவரது மனைவி கௌரியிடம் அபிஷேக்கும், ஐஸ்வர்யாவும் மன்னிப்பு கேட்டுவிட்டு வீடு திரும்பியுள்ளார்களாம்.
ஹேப்பி நியூ இயர் ஹிட்டான சந்தோஷத்தில் இருக்கும் ஷாருக்கானுக்கு ஜெயாவின் கருத்து வருத்தத்தை அளித்துள்ளதாம்.
Post a Comment