சமீபத்தில் மறைந்த எஸ்எஸ்ஆர் எனும் எஸ்எஸ் ராஜேந்திரனின் உருவப் படத்தை நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் திறந்து வைத்து மரியாதை செலுத்தினார்.
நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்தவர், லட்சிய நடிகர் எனப் புகழப்பட்ட எஸ்.எஸ்.ராஜேந்திரன். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் வைத்து எஸ்.எஸ். ராஜேந்திரனுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
பிறகு சிகிச்சை பலனின்றி அக்டோபர் 24-ம் தேதி காலமானார். இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர். இவரது இறுதி சடங்கில் ஏராளமான நடிகர், நடிகைகள் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.
மறைந்த இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் இல்லத்தில் இவரது திருவுருவப் படத்தை தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் திறந்து வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதில் நடிகர் சங்க நிர்வாகிகள் ராதாரவி, வாகை சந்திரசேகர், விஜயகுமார், சத்யராஜ், கே.என்.காளை, எம்.என்.கே.நடேசன் மற்றும் எஸ்.எஸ்.ஆர் குடும்பத்தினர் கலந்துக் கொண்டனர்.
Post a Comment