லிங்கா கவுன்ட் டவுன் தொடங்கியது.... இன்னும் 140 மணி நேரம் மட்டுமே!

|

ரஜினிகாந்த் இரு வேடங்களில் நடிக்கும் லிங்கா படத்தின் வெளியீட்டுக்கு இன்னும் 6 நாட்களே உள்ளன. ரசிகர்கள் இந்தப் படத்தை வரவேற்க பல்வேறு ஏற்பாடுகளை உலகளவில் செய்து வருகின்றனர்.

முதல் முறையாக 5000 அரங்குகளுக்கு மேல் வெளியாகும் இந்தியப் படம் என்ற பெருமையோடு வெளியாகிறது லிங்கா.

லிங்கா கவுன்ட் டவுன் தொடங்கியது.... இன்னும் 140 மணி நேரம் மட்டுமே!

இதுவரை இந்தியப் படங்கள் வெளியாகாத கானா போன்ற நாடுகளிலெல்லாம் லிங்கா வெளியாகிறது. கிட்டத்தட்ட ஐரோப்பாவின் அனைத்து நாடுகளிலுமே இந்தப் படம் வெளியாகிறது.

படத்தின் சென்னை உரிமையைப் பெற பெரிய போட்டியே நடந்து வருகிறது. அபிராமி ராமநாதன் லிங்கா வெளியீட்டு உரிமை பெறுவதில் தீவிரமாக உள்ளார்,

மதுரை பகுதியை அன்புச் செழியன் விலை பேசி வருகிறார்.

முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் ரசிகர்கள் பல்வேறு பகுதிகளில் திரையரங்குகளை ஒப்பந்தம் செய்து வருகின்றனர். பெரும்பாலான பகுதிகளில் நள்ளிரவு 12 அல்லது 1 மணிக்கு சிறப்புக் காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் காசி, ராக்கி, ஏஜிஎஸ் போன்ற அரங்குகளில் அதிகாலை 4 மணிக்கு முதல் காட்சி தொடங்குகிறது.

தமிழகத்தில் லிங்கா முதல் ஷோவுக்கு இன்னும் 140 மணி நேரங்களே உள்ளன.

 

Post a Comment