சாமி படம் என்றால் 'ஏ' ரகமாகத்தான் இருக்கும் என்று முத்திரை குத்தப்பட்டு, அந்த முத்திரை கடந்த காலங்களில் அவரை விடாமல் துரத்தி வந்தது.
இதுவரை பாலுணர்வை உயர்த்திப் பிடித்த சாமி 'நான் அப்படிப்பட்ட இயக்குநரல்ல. ஆளை விடுங்கப்பா சாமி' என்று இப்போது பாசவுணர்வை தூக்கிப்பிடித்து ஒரு படம் செய்திருக்கிறார். அதுதான் ‘கங்காரு'
இதில் நாயகனாக அர்ஜுனா என்பவர் நடித்துள்ளார். ஸ்ரீபிரியங்கா, வர்ஷா அஸ்வதி, ஆர்.சுந்தர்ராஜன், தம்பிராமையா, கலாபவன் மணி, கஞ்சா கருப்பு, தயாரிப்பாளர் ஜின்னா ஆகியோர் நடித்துள்ளனர்.
சாமியின் முந்தைய படங்கள் பற்றி அவரது அம்மாவே திட்டியிருக்கிறார். ''இனியாவது ஒழுங்காக நல்ல மாதிரியாக படம் பண்ணு", என்று.
சாமியும் 'கங்காரு என் அம்மாவே பாராட்டும்படி இருக்கும்.. இது வரையிலான சாமியின் பிம்பத்தை இப்படம் நிச்சயம் உடைக்கும்,' என்று முந்தைய பேட்டிகளில் கூறி வந்தார்.
அதனை உறுதி செய்யும் விதமாக படம் பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள் கங்காருவுக்கு கிளீன் ''யு'' சான்றிதழ் வழங்கியுள்ளனர். என்னது 'யு' வா என வியக்கிறது கோலிவுட்.
வி ஹவுஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்தப் படம் விரைவில் வெளியாகிறது.
Post a Comment