நடிகைகளை ஏன் பிரித்துப் பார்க்கிறீர்கள்... எங்களுக்கும் காதல், திருமண ஆசை எல்லாம் இருக்கும்தானே, என்று
இதில் கடுப்பாகிவிட்டார் த்ரிஷா. சமீபத்தில் அவரிடம் அவரது திருமணம் குறித்துக் கேட்டபோது, "கதாநாயகிகளை மக்கள் ஸ்பெஷலாக பார்க்கிறார்கள். அப்படி எதுவும் இல்லை. நாங்களும் மற்றவர்கள் போலத்தான். எங்களுக்கும் மனசு, காதல், திருமண ஆசைகள் எல்லாம் இருக்கிறது.
மற்றவர்கள் போலவே நாங்களும் வாழ ஆசைப்படுகிறோம். விருப்பு, வெறுப்புகள் எங்களுக்கும் இருக்கிறது. இதைப் புரிந்து கொண்டு எங்களையும் மதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
எங்களின் தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்," என்றார்.
Post a Comment