பாரத ரத்னா விருது பெறும் அளவுக்கு எனக்கு தகுதியில்லை.. நாடு இப்போது தந்திருக்கும் கவுரமே பெரியது என நடிகர் அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.
பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சனுக்கு, நாட்டின் 2-வது உயரிய விருதான ‘பத்மவிபூஷண்' வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மம்தா கருத்து
இது குறித்து கருத்து தெரிவித்த மேற்கு வங்காள முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, "அமிதாப்பச்சனுக்கு பத்மவி பூஷணுக்கு பதிலாக பாரத ரத்னா விருதினை அறிவித்து கவுரவம் செய்திருக்க வேண்டும்.. அதற்கு தகுதியானவர் அவர்," என கூறியிருந்தார்.
அமிதாப்
இதற்கு அமிதாப் பச்சன் தனது ‘ட்விட்டர்' பக்கத்தில் இப்படி பதிலளித்திருந்தார்:
"மம்தா அவர்களே, பாரத ரத்னா என்ற அங்கீகாரம் பெறுவதற்கு எனக்கு தகுதி இல்லை. நாடு எனக்கு இப்போது தந்திருப்பதே மிகவும் கவுரவமானது என அடக்கத்துடன் கூறிக் கொள்கிறேன்," என்றார்.
Post a Comment