சென்னை: மயிலு தன்னிடம் கதை சொன்ன முன்னணி தெலுங்கு இயக்குனருக்கு செம டோஸ் கொடுத்து அனுப்பிவிட்டாராம்.
பாலிவுட் இயக்குனரை திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டிலான மயிலு நடிகை பல ஆண்டுகள் கழித்து தற்போது தான் கோலிவுட்டுக்கு வந்துள்ளார். மிருகத்தின் பெயர் கொண்ட படத்தில் அவர் நடித்து வருகிறார். படத்தில் நடிக்க அவருக்கு ரூ.5 கோடி சம்பளம் என்று கூறப்படுகிறது. இரண்டு ஹீரோயின்களை விட அம்மாவாக நடிக்கும் மயிலுக்கு தான் அதிக சம்பளமாம்.
இந்நிலையில் முன்னணி தெலுங்கு இயக்குனர் ஒருவர் தனது படத்தில் நடிக்க வைக்க மயிலு நடிகையை பார்க்க வந்துள்ளார். நடிகையிடம் அவர் தனது படத்தின் கதையை கூறியுள்ளார். கதையை கூறிவிட்டு மயிலு நடிகையின் கதாபாத்திரத்தை அவரிடம் தெரிவித்துள்ளார்.
தனது கதாபாத்திரத்தை கேட்டவுடன் மயிலுக்கு மூக்கிற்கு மேல் கோபம் வந்து இயக்குனரை பார்த்து என்னை பார்த்து அந்த கதாபாத்திரத்தில் நடிக்க சொல்வீர்களா என்று கண்டபடி திட்டித் தீர்த்துவிட்டாராம். விலைமாது கதாபாத்திரத்தில் நடிக்குமாறு கூறியதால் தான் இயக்குனருக்கு டோஸ் விட்டுள்ளார் மயிலு.
நடிகையிடம் திட்டு வாங்கிய இயக்குனர் யார் என்பது இன்னும் தெரியவில்லை. எப்படியும் விரைவில் தெரிந்துவிடும்.
Post a Comment