தமிழ், தெலுங்கில் பதினைந்தே நாட்களில் படமான மான் வேட்டை!

|

ஒரு கோடி ரூபாய் செலவில், பதினைந்தே நாட்களில், தமிழ் தெலுங்கில் ஒரு படம் உருவாகியுள்ளது.

படத்தின் பெயர் மான் வேட்டை. இயக்கியிருப்பவர் தீ நகர், அகம் புறம் படங்களைத் தந்த திருமலை.

ஷரண் நாயகனாகவும், சுனிமா நாயகியாகவும் நடித்துள்ள இந்தப் படத்தில் தேஜஸ், பிரியா, பிரதீப், மாயா, சுமன் ஷெட்டி, வனிதா ஆகியவர்களும் நாயக - நயகியராக நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கில் பதினைந்தே நாட்களில் படமான மான் வேட்டை!

இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். விஜய் வல்சன், ரதீஷ் கண்ணா ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். கிருஷ்ண குமார், கமலக்கண்ணன் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தை திகில் நிறைந்த திரில்லர் படமாக இயக்கியிருக்கிறார் திருமலை.

த்ரில்லர்...

இப்படத்தை பற்றி இயக்குனர் கூறுகையில், "நான்கு ஜோடிகள் வார விடுமுறையை கொண்டாட ஒரு மலைக்குச் செல்கிறார்கள். அங்கு ஒருவர் பின் ஒருவராக மர்மமான முறையில் இறக்கிறார்கள். இதில் கடைசியாக ஒருவர் மட்டும் மிஞ்சுகிறார். அந்த மலையில் என்ன நடக்கிறது? இவர்கள் எப்படி இறந்தார்கள்? என்பதை சஸ்பென்ஸ் கலந்த திரில்லர் படமாக உருவாக்கியிருக்கிறேன்.

ஒரு கோடிக்கும் குறைவுதான்...

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் 15 நாட்களில் படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறேன். ஒரு கோடிக்கும் குறைவான செலவில் இப்படத்தை எடுத்திருக்கிறேன்.

மலைகளில்

மலை சம்மந்தப்பட்ட படம் என்பதால் கொடைக்கானல், கோனே நீர்வீழ்ச்சி, தலக்கோணம் ஆகிய இடங்களில் படப்பிடிப்பை நடத்தியுள்ளேன்.

மார்ச்சில்...

படத்தின் கதை 2 இரவுகளில் நடக்கும் வகையில் அமைத்திருக்கிறேன். படத்தின் முதல் காப்பி ரெடியாகிவிட்டது. மார்ச் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளோம்," என்றார்.

 

Post a Comment