கமல் ஹாசன் மகள் அக்ஷரா ரத்தத்திலேயே நடிப்பு ஊறியுள்ளது- சொல்வது சூப்பர் ஸ்டார் மருமகன்

|

சென்னை: அக்ஷரா ஹாசன் ரத்தத்திலேயே நடிப்பு ஊறியுள்ளதாக புகழாரம் சூட்டினார் நடிகர் தனுஷ்.

ஆர்.பாலகிருஷ்ணன் என்ற பால்கி இயக்கத்தில் பிப்ரவரி 6ம்தேதி வெளியாக உள்ளது ஷமிதாப் என்ற ஹிந்தி திரைப்படம். இதில் அமிதாப்பச்சன், தனுஷ், கமல்ஹாசன் மகள் அக்ஷரா ஹாசன் போன்றோர் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் பல்வேறு நகரங்களில் நடந்துவருகின்றன.

கமல் ஹாசன் மகள் அக்ஷரா ரத்தத்திலேயே நடிப்பு ஊறியுள்ளது- சொல்வது சூப்பர் ஸ்டார் மருமகன்

படம் குறித்து தனுஷ் கூறியதாவது: ஷமிதாப் திரைப்படத்தில் மிகவும் சவாலான வேடம், அக்ஷராவுக்கு அளிக்கப்பட்டுள்ளது. முதல் படம் என்ற போதிலும், அக்ஷரா தனது கதாப்பாத்திரத்தில் அருமையாக நடித்துள்ளார். ஏனெனில் நடிப்பு அக்ஷராவின் ரத்தத்திலேயே கலந்துள்ளது. எந்த ஒரு காட்சியிலும் அக்ஷரா நடிக்க சிரமப்பட்டதை நான் பார்க்கவேயில்லை.

அமிதாப்பச்சன் போன்ற ஜாம்பவானுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று நான் என்றுமே நினைத்ததில்லை. அவருடன் நடிப்பதே, சிறப்பான அனுபவம். இவ்வாறு தனுஷ் தெரிவித்தார்.

 

Post a Comment