ஐ படத்தை எதிர்க்க வேண்டாம் - திருநங்கைகளுக்கு ஓஜாஸ் ரஜனி வேண்டுகோள்

|

மும்பை: ஐ படத்தை தயவு செய்து எதிர்க்க வேண்டாம். அந்தப் படம் திருநங்கைகளுக்கு எதிரானதல்ல என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் படத்தில் திருநங்கை வேடத்தில் நடித்த ஓஜாஸ் ரஜனி.

‘ஐ' படத்தில் 'திருநங்கைகளை' அவதூறாக சித்தரித்துள்ளதாக இயக்குனர் ஷங்கருக்கு எதிராக திருநங்கைகள் அமைப்பினர் கடந்த சில தினங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து, இப்படத்தில் திருநங்கை வேடத்தில் நடித்த ஓஜாஸ் ரஜனி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஐ படத்தை எதிர்க்க வேண்டாம் - திருநங்கைகளுக்கு ஓஜாஸ் ரஜனி வேண்டுகோள்

அன்பான வேண்டுகோள்

அதில், "திருநங்கை நண்பர்களுக்கு என்னுடைய அன்பான வேண்டுகோள். ‘ஐ' படத்தின் கதை ஒரு காதல் கதை.

என்னுடைய கதாபாத்திரம்

அந்த காதலை ஒரு திருநங்கை வெளிப்படுத்துவது போன்ற கதாபாத்திரம் என்னுடையது.

புண்படுத்த அல்ல

மற்றபடி, யார் மனதையும் புண்படுத்தும் விதமாகவோ, யாரையும் குறைத்து மதிப்பிட வேண்டும் என்பதற்காகவோ எடுக்கப்படவில்லை.

அழகாக படமாக்கியிருக்கிறார் ஷங்கர்

என்னுடைய கதாபாத்திரத்தை ஷங்கர் ரொம்பவும் அழகாக படமாக்கியிருந்தார்.

நான் இந்தியாவில் இல்லை

நான் தற்போது இந்தியாவில் இல்லை. படப்பிடிப்பிற்காக வெளிநாடு சென்றிருக்கிறேன்.

கோபம் வேண்டாம்.. கொண்டாடுங்கள்

ஆகையால், இந்த அறிக்கையை என்னுடைய வேண்டுகோளாக ஏற்று, ‘ஐ' படத்தின் மீது எந்த கோபமும் வேண்டாம், வெற்றியை மட்டும் கொண்டாடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன், " என்று கூறியுள்ளார்.

 

Post a Comment