‘இது நம்ம ஆளு’ குழுவின் காதலர் தின பரிசு!

|

சிம்பு, நயன்தாரா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கும் ‘இது நம்ம ஆளு' படம் அதி வேகமாக தயாராகி வருகிறது.

‘இது நம்ம ஆளு’ குழுவின் காதலர் தின பரிசு!

ரசிகர்களுக்கு காதலர் தின பரிசாக படத்தின் சிறு வீடியோ (Bloopers) நேற்று மாலை 'இது நம்ம ஆளு ' படக் குழுவினர் வெளியிட்டனர் .

‘இது நம்ம ஆளு’ குழுவின் காதலர் தின பரிசு!

இதுகுறித்து இயக்குநர் பாண்டிராஜ் கூறுகையில், "படத்தின் டீசருக்கு ரசிகர்கள் கொடுத்த அதரவு எங்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அமைந்தது. ‘இது நம்ம ஆளு' காதலை மையமாகக் கொண்ட படம். ஆதலால் காதலர் தின பரிசாக இந்த சிறு காணொலியை வெளியிட்டுள்ளோம்.

‘இது நம்ம ஆளு’ குழுவின் காதலர் தின பரிசு!

இந்த வீடியோவில் ஷூட்டிங் சமயத்தில் நடந்த சிறுசிறு தவறுகள் அதில் நாங்கள் மகிழ்ந்த விஷயங்கள் உள்ளடக்கியிருக்கும். அதேபோல் நம் உறவுகளின் மத்தியில் நடக்கும் சிறுசிறு தவறுகளை மறந்து மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை தொடர வேண்டும்" என்றார்.

 

Post a Comment