ரஜினி - ஷங்கர் படம் கிட்டத்தட்ட கன்பர்மாகிவிட்ட மாதிரிதான் தெரிகிறது. விசாரித்த வரையில் அத்தனை பேரும் இதை உறுதியாகச் சொல்கிறார்கள்.
ஆனாலும் ரஜினி தரப்பிலிருந்து சொல்லும் வரை எதுவும் நமக்கு உறுதியற்ற தகவல்தானே...
இருந்தாலும், கோடம்பாக்கத்தில் உலாவரும் செய்திகளின் தொகுப்பு இது.
படத்துக்கு பட்ஜெட் ரூ 250 கோடி என்கிறார்கள். தயாரிப்பு நிறுவனம் லைக்கா மற்றும் அதே அய்ங்கரன்.
தமிழில் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கிலும் நேரடிப் படமாகவே தயாரித்து பெரிய அளவில் வெளியிட வேண்டும் என்று திட்டமிட்டு முன் தயாரிப்பு வேலைகளை ஆரம்பித்துள்ளதாகக் கூறுகிறார்கள்.
இந்தப் படம் எந்திரன் 2-ஆ வேறு படமா? என்ற கேள்விக்கு இன்னும் விடையில்லை.
காரணம் எந்திரன் 2 என்றால் அது இரண்டு ஆண்டுகளுக்கு மேல் எடுத்துக் கொள்ளும். அதற்குள் முடிக்க வேண்டும் என்றால் வேறு கதைதான் என்கிறார்கள்.
இந்தப் படத்தில் நிச்சயம் கமல் ஹாஸன் இல்லை. ரஜினிக்கு இரட்டை வேடம் என்றும், அவருக்கு இணையான வேடத்தில் விக்ரம் நடிப்பார் என்றும் கூறுகிறார்கள். வெளிநாடு சென்றிருக்கும் விக்ரம் திரும்பக் காத்திருக்கிறாராம் ஷங்கர்.
இப்போது ரஜினி தீவிர கதை விவாதத்தில் இருப்பதாகவும், வரும் மே 15-ம் தேதி வாக்கில் பட அறிவிப்பு வெளியாகும் என்றும் சொல்கிறார்கள்.
Post a Comment