5 நாளில் 21 கோடி வசூல்... கொம்பன் இயக்குநருக்கு இன்னோவா பரிசளித்த ஞானவேல் ராஜா!

|

கொம்பன் படம் பெரிய வெற்றியைப் பெற்றதால், அப்படத்தின் இயக்குநர் முத்தையாவுக்கு இன்னோவா காரைப் பரிசளித்துள்ளார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா.

பல்வேறு பிரச்னைகளை கடந்து திரைக்கு வந்த ‘கொம்பன்' நல்ல வசூலுடன் தமிழகம் முழுவதும் ஓடிக்கொண்டிருக்கின்றது.

5 நாளில் 21 கோடி வசூல்... கொம்பன் இயக்குநருக்கு இன்னோவா பரிசளித்த ஞானவேல் ராஜா!

குறிப்பாக கொம்பன் படமாக்கப்பட்ட இராமநாதபுரம், மாவட்டத்தில் படத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. வெளியான 5 நாட்களில் தமிழகத்தில் மட்டும் 21 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாம் இந்தப் படம்.

கார்த்தி நடித்த படங்களிலேயே அதிக வசூலை பெற்றுத் தரும் படம் இதுவாகத்தான் இருக்கும் என்கிறார்கள் பாக்ஸ் ஆபீஸ் வட்டத்தில். எனவே, படத்தின் வசூல் விநியோகஸ்தர்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இந்நிலையில் படத்தின் இயக்குனர் எம்.முத்தையாவிற்கு, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இன்னோவா கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.

தன்னை மட்டுமின்றி ரசிகர்களையும் திருப்தி செய்த இயக்குனருக்கு தான் அளிக்கும் ஒரு சிறு பரிசுதான் இந்த இன்னோவா கார், என்றும் ஞானவேல்ராஜா கூறியுள்ளார்.

 

Post a Comment