வருண் மணியன் தொடர்பான எந்தப் படமாக இருந்தாலும் அதில் நடிப்பதில்லை என்பதை கொள்கையாகவே வைத்துக் கொண்டிருக்கிறார் போலிருக்கிறது நடிகை த்ரிஷா.
சமீபத்தில் வருண் மணியனுக்கும் த்ரிஷாவுக்கும் திருமணம் நிச்சயமாகி, அதே வேகத்தில் முறிந்தும்போனது.
அவர் தயாரிப்பில் ஜெய்க்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமான படத்திலிருந்து விலகிக் கொண்டார் த்ரிஷா.
அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கவிருந்தார். ஆனால் அந்தப் படத்துக்கு வருண் மணியன்தான் நிதியுதவி செய்கிறார் என்பது தெரிந்ததும் அந்தப் படத்திலிருந்தும் திடீரென விலகுவதாக அறிவித்தார்.
ஷூட்டிங் போகும் நேரத்தில் இப்படி அறிவித்துவிட்டாரே என அதிர்ந்த செல்வராகவன், அடுத்த ஹீரோயின் தேடிக் கொண்டிருக்கிறார்.
இப்போதெல்லாம் புதிய படம் கமிட்டாகும்போதே, அந்தப் படத்தில் வருண் மணியனுக்கு எந்த வகையிலும் தொடர்பில்லை என்பதை உறுதி செய்த பிறகே ஒப்புக் கொள்கிறார் என்கிறார்கள்.
Post a Comment