பாபநாசம் பட ரிலீஸ் தேதி திடீர் அறிவிப்பு: சிறுபடத் தயாரிப்பாளர்கள் போர்க்கொடி!

|

சென்னை: கமல் ஹாஸன் நடித்த பாபநாசம் படத்தை ஜூலை 3-ம் தேதி வெளியிட சிறு பட்ஜெட் படத் தயாரிப்பாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பெரிய நடிகர்களின் படங்கள் அல்லது பதினைந்து கோடி முதலீட்டைத் தாண்டிய படங்களை குறிப்பிட்ட பத்து தினங்களில்தான் வெளியிட வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் சில மாதங்களுக்கு முன் புதிய கட்டுப்பாட்டை விதித்தது.

Small Budget producers opposed Papanasam release date

அதன்படி கடந்த மே 1-ம் தேதி கமல் ஹாஸன் நடித்த உத்தம வில்லன் படம் வெளியானது.

இனி அவரது புதிய படம் வெளியாக வேண்டுமானால் விஜய தசமி அல்லது விநாயகர் சதுர்த்தி போன்ற ஏதாவது ஒரு தினத்தில்தான் வெளியிட முடியும். ஆனால் சங்கத்தின் கட்டுப்பாட்டை மீறி கமல் நடித்த பாபநாசம் படத்தை திடீரென ஜூலை 3-ம் தேதி வெளியிடப் போவதாக அறிவித்துள்ளனர்.

இதற்கு சிறு முதலீட்டுத் தயாரிப்பாளர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். ஜூலை 3-ம் தேதி விவேக் நடித்த பாலக்காட்டு மாதவன், நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும், குற்றம் கடிதல் உள்ளிட்ட 5 படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன.

அன்றைய தேதியில் கமல் படம் வெளியானால் மற்ற படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்காத சூழல். எனவே பாபநாசம் படத்தை வெளியிடக் கூடாது என தயாரிப்பாளர் சங்கத்தை வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து பேச்சுவார்த்தையும் இன்று நடக்கிறது.

Small budget producers shows their agitation for the sudden of release date (June 3rd) of Papanasam.

 

Post a Comment