குரு சூர்யாவா, சிஷ்யன் முருகதாஸா.. விஜயின் 60 வது படத்தை இயக்கப் போவது யார்?

|

சென்னை: நடிகர் விஜயின் 60 வது படத்தை இயக்கப் போவது யார் என்ற கேள்வி திரையுலகில் மீண்டும் எழுந்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர் இந்தக் கேள்வி எழுந்த போது பிரபுதேவா மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் இருவரின் பெயர்களும் அடிபட்டன.

ஆனால் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் பெயரும் மற்றொரு இயக்குனரான எஸ்.ஜே.சூர்யாவின் பெயரும், அடிபடுகின்றன. சமீபத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிகர் விஜயை சந்தித்து பேசியிருக்கிறார்.

Vijay 60: SJ Suryah or AR Murugadoss?

அப்போது அடுத்த படத்தின் கதையைப் பற்றி விஜயிடம் ஒருசில வரிகள் கூற, விஜய்க்கு அந்தக் கதை பிடித்துப் போய்விட்டது என்று கூறுகிறார்கள். ஏற்கனவே இருவரும் இணைந்த குஷி திரைப்படம் பிளாக்பஸ்டராக மாறியது அனைவரும் அறிந்ததுதான்.

ஆனால் இருவரும் சேர்ந்து புலி என்ற பெயரில் மீண்டும் இணையத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் அது முடியாமல் போய் விட்டது. தற்போது அந்தப் படப் பெயரை வாங்கித்தான் புலி படத்தில் நடித்துள்ளார் விஜய் என்பது நினைவிருக்கலாம்.

மற்றொரு பக்கம் விஜயை வைத்து ஏற்கனவே 2 மெகாஹிட் படங்களைக் கொடுத்த இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், விஜயை வைத்து அடுத்த படத்தை இயக்க ஆர்வமாக இருக்கிறார்.இருவரில் யாருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கப் போகிறது என்று தெரியவில்லை.

முருகதாஸின் குருதான் எஸ்.ஜே.சூர்யா என்பதால் யாருக்கு வாய்ப்பு கிடைத்தாலும் மற்றவர்கள் மகிழவே செய்வார்கள் என்று நம்பலாம்.

எதுவாக இருந்தாலும் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தின் ஷூட்டிங் முடிந்தவுடன் தான் விஜயின் 60 வது படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும்.

இன்னும் சிலமாதங்கள் கழித்து விஜயின் 60 வது படம் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் வெளியாகும் என்று கூறுகிறார்கள். பார்க்கலாம் விஜய் யாரைத் தேர்வு செய்கிறார் என்று?

 

Post a Comment