சென்னை: தளபதியோட இடத்தை பிடிப்பது தான் தனது குறிக்கோள் என சங்கத் தலைவர் நடிகர் தெரிவித்துள்ளாராம்.
சங்கம் படம் மூலம் மிகவும் பிரபலமான அந்த நடிகர் காட்டில் தற்போது வாய்ப்பு மழை பெய்து கொண்டிருக்கிறது. அவர் காக்கிச்சட்டை போட்டு வந்த படமும் ஹிட்டாகியுள்ளது. இதனால் அவர் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார்.
இந்நிலையில் சங்கத் தலைவர் நடிகரின் படங்களுக்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு இருப்பதை பார்த்த வினியோகஸ்தர்கள் அவரது படத்தை வாங்க போட்டா போட்டி போடுகிறார்கள். இதற்கிடையே சிலர் சங்கத் தலைவருக்கு தளபதி போன்று ரசிகர்கள் பட்டாளம் ஏராளம் ஏராளம் தெரியுமா என்று பிட்டை போட்டு வருகிறார்கள்.
அதனால் அவரின் படத்தை சொன்ன விலைக்கு மறுபேச்சு பேசாமல் வினியோகஸ்தர்கள் வாங்கிச் செல்கிறார்களாம். அண்ணே, உங்க படத்தை வினியோகஸ்தர்கள் போட்டி போட்டு வாங்கிச் செல்கிறார்கள் என்று ஆதரவாளர்கள் நடிகரிடம் தெரிவித்துள்ளனர்.
நல்ல செய்தி கேட்டு குஷியான நடிகர் அதை கொண்டாட பார்ட்டி கொடுத்துள்ளார். பார்ட்டிக்கு வந்தவர்களிடம் இன்னும் 2 ஆண்டுகளில் டாப் நடிகராகிவிடுவேன். தளபதி இடத்தைப் பிடிப்பது தான் என் குறிக்கோள் பார் என்று சொடுக்கிக் கூறினாராம்.
Post a Comment