“கத்துக்குட்டி” யால் சேற்றில் மாட்டிக் கொண்ட ஸ்ருஷ்டி

|

சென்னை: மேகா படத்தில் புத்தம்புது காலை பொன்னிற வேளை என்று அஷ்வினுடன் கன்னத்தில் குழிவிழ ஆடிப் பாடிய நடிகை ஸ்ருஷ்டி டாங்கே, கத்துக்குட்டி படப்பிடிப்பின் போது சேற்றில் இறங்கி மாட்டிக் கொண்டாராம்.

உடனே பதறி விடாதீர்கள் என்ன நடந்தது என்று பார்ப்போம், புதுமுக இயக்குநர் சரவணன் இயக்கும் படம் கத்துக்குட்டி. நரேன், ஸ்ருஷ்டி இவர்களுடன் சூரியும் ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடிக்கிறார்.

சமீபத்தில் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் வேகமாக நடந்து கொண்டிருந்த போது, ஒரு பாடல் காட்சிக்காக ஸ்ருஷ்டியை சேற்றில் இறங்கி நாற்று நடச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சரவணன்.

மும்பையில் பிறந்து வளர்ந்த ஸ்ருஷ்டிக்கு அரிசியே தெரியாது அவரிடம் போய் நாற்று நடச் சொன்னால் பாவம் என்ன செய்வார், தயங்கித் தயங்கி நின்றிருக்கிறார். இதைப் பார்த்த இயக்குநர் உடனே கிராமத்துப் பெண்கள் சிலரை வரவழைத்து அவர்கள் உதவியுடன், ஸ்ருஷ்டியை வயலில் இறக்கி விட்டிருக்கிறார்.

Kathukutty Movie-Shooting Spot

வயலில் இறங்கிய ஸ்ருஷ்டி கிராமத்துப் பெண்கள் சொல்லிக் கொடுத்தபடி, நாற்று நட்டு இயக்குனரிடம் பாராட்டு வாங்கி விட்டார். ஆனால் அதன்பிறகு தான் ஆரம்பித்தது சிக்கல், வெளியே வர காலை எடுத்த ஸ்ருஷ்டி கால்கள் இரண்டும் சேற்றில் புதைந்து கொண்டதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து விட்டாராம்.

கால்களை வெளியே எடுக்க முடியாமல் ஸ்ருஷ்டி தத்தளிக்க, ஒருவழியாக கிராமத்தினரும் படக்குழுவினரும் வயலுக்குள் இறங்கி ஸ்ருஷ்டியை மீட்டிருக்கிறார்கள்.

அவ்வளவு தான் ஸ்ருஷ்டி காப்பற்றப்பட்டு விட்டார்...

 

Post a Comment