"பர்ஸ்ட் ஹாப்"... சொதப்பிய கோலிவுட்... பட்டையைக் கிளப்பும் பாலிவுட்!

|

மும்பை: இந்திய சினிமாவில் மிகவும் அதிகமான பொருட்செலவில் உருவாகும் படங்கள் பட்டியலில் முதலிடம் பாலிவுட்டுக்கு என்றால், அடுத்த இடத்தை தட்டிச் செல்வது கோலிவுட். இந்திப் படங்களுக்கு அடுத்த இடத்தில் படங்கள் தயாரிப்பு, தரம் மற்றும் சிறந்த இயக்குனர்கள் போன்றவற்றை அதிகம் பெற்று இருப்பது தமிழ்த் திரையுலகம் தான்.

இவையெல்லாம் இருந்தும் என்ன பயன் என்று கேள்வியைக் கேட்க வைக்கிறது இந்த 6 மாத காலத்தில், தமிழ்த் திரையுலகில் வெளிவந்த படங்களின் நிலவரங்கள்.தமிழில் இந்த 6 மாத காலத்தில் சுமார் 105 திரைப்படங்கள் வெளிவந்துள்ளன.

2015: Best Movies In Bollywood

அவற்றில் வெற்றிபெற்ற படங்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா, வெறும் 10 படங்கள் தான். அதே சமயம் தமிழ்த் திரையுலகினருக்கு சோதனையாக அமைந்த இந்த 6 மாத காலமும், இந்தித் திரையுலகினருக்கு சாதனையாக அமைந்துள்ளது.

இந்தியில் இந்த வருடத்தில் வெளிவந்த கப்பர் இஸ் பேக், தில் தடக்னே டூ, பிக்கு, NH 10, தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ், ஹன்டர், தும் லகா ஹே ஹைசா, ஏபிசிடி 2 ஆகிய திரைப்படங்கள் வசூலில் பெரும் சாதனையை நிகழ்த்தி இருக்கின்றன.

இதில் தனுவெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ் திரைப்படம் இதுவரை 150 கோடி ரூபாயை வசூலித்து சாதனை புரிந்துள்ளது, ஏபிசிடி2 98 கோடி ரூபாயை இதுவரை வசூலித்து உள்ளது.

இந்த வருடம் முதல் 6 மாதம் நல்ல வசூல், சிறந்த படங்கள் என்று இந்தித் திரையுலகம் சாதனையை நோக்கிப் பயணித்து உள்ளது, அதே சமயம் முதல் 6 மாதத்தில் எந்த சாதனையும் நிகழ்த்தாத தமிழ்த்திரையுலகம் சோதனைகளை நோக்கிப் பயணித்து உள்ளது.

முதல் 6 மாத காலத்தில் செய்யாத சாதனையை அடுத்த 6 மாத காலத்தில் தமிழ்த் திரையுலகம் சாதிக்கும் என்று நம்பலாம்.

இந்த நம்பிக்கைக்கு அடித்தளமிடுவது போல பாபநாசம் மற்றும் பாலக்காட்டு மாதவன் போன்ற திரைப்படங்கள், வெளிவந்து நல்ல வரவேற்பை மக்களிடம் பெற்றுள்ளன.

இதே பாதையில் பயணம் செய்யுமா தமிழ்ப்படங்கள் பொறுத்திருந்து பார்க்கலாம்...

 

Post a Comment