சினிமாவை விட்டு விலகப் போவதாக தெலுங்கு திரையுலகின் பிரபல நாயகன் பாலகிருஷ்ணா அறிவித்துள்ளார்.
தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகராகத் திகழ்பவர் நடிகர் பாலகிருஷ்ணா. இவர் மறைந்த முன்னாள் நடிகரும், ஆந்திராவின் முதல்வருமாகத் திகழ்ந்த என்.டி.ராமாராவின் மகன்.
இவர், நடித்த பல படங்கள் தெலுங்கு திரையுலகில் பெரும் வெற்றிப் பெற்றன. சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும்போதே பாலகிருஷ்ணா தீவிர அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், கடந்த 40 வருடங்களாக சினிமாவில் கோலாச்சி வரும் பாலகிருஷ்ணா, தற்போது சினிமாவில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். தனது 100-வது படத்தை முடித்த கையோடு சினிமாவில் இருந்து விலகி தீவிர அரசியலில் களமிறங்க பாலகிருஷ்ணா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பாலகிருஷ்ணா தற்போது தனது 99-வது படமாக ‘டிக்டேட்டர்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த வருடத்தின் இறுதியில் முடிவடைய உள்ளது. இதைத் தொடர்ந்து, போயாபதி சீனு இயக்கும் தனது 100-வது படத்தில் அடுத்த ஆண்டு நடிக்கவிருக்கிறார்.
இப்படத்தை முடித்த பிறகு, 2017-ஆம் ஆண்டு முதல் பாலகிருஷ்ணா தீவிர அரசியலில் களமிறங்கப் போவதாக கூறப்படுகிறது. அதன் முதற்கட்டமாக தான் எம்எல்ஏவாக உள்ள ஹிந்துபூர் தொகுதியின் வளர்ச்சி பணிகளில் தீவிரம் காட்டப் போவதாக அறிவித்துள்ளார்.
Post a Comment