சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கு கண்டிப்பாக முதல்வர் ஜெயலலிதாவினை வாக்களிக்க அழைப்போம் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு விரைவில் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில் நடிகர் சரத்குமார் தலைமையிலான ஒரு அணியும், விஷால் தலைமையிலான மற்றொரு அணியும் போட்டியிடுகின்றன. இந்த தேர்தலில் மூத்த உறுப்பினர் என்ற முறையில் முதலமைச்சர் ஜெயலலிதாவை ஓட்டளிக்க அழைப்பு விடுப்போம் என்று விஷால் தெரிவித்துள்ளார்.
சென்னைக்கு அருகில் உள்ள பூந்தமல்லி கீழ்மாநகரில் உள்ள 1000 ஆண்டுகள் பழமையான முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்து சிறப்பு வழிபாடும் நடத்தப்பட்டது.
இந்த விழாவில் நடிகர் விஷால் கலந்துகொண்டு, அம்மனின் தரிசனம் பெற்றார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, "நடிகர் சங்க வாக்காளர் பட்டியலில் மூத்த கலைஞர் கருணாநிதியின் பெயர் இல்லை. இது அவமானகரமானது.
நடிகர் சங்க தேர்தலில் வாக்களிக்க முதலமைச்சர் ஜெயலலிதா அழைப்பு விடுக்கவுள்ளோம். இதற்காக அவரைச் சந்திக்கவுள்ளோம். அனுமதி கேட்டுள்ளோம். கிடைத்ததும் நிச்சயமாக சந்திப்போம். அவர் வந்து வாக்களித்தால் அதை விட மகிழ்ச்சி வேறு இல்லை. அவர் நிச்சயம் வாக்களிப்பார் என நம்புகிறேன் என்றார் விஷால்.
Post a Comment