போக்கிரி மன்னன்: ஹீரோவாக மாறிய டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர்

|

பிரபு தேவா, ராகவா லாரன்ஸ் வழியில் இன்னொரு டான்ஸ் மாஸ்டரும் ஹீரோவாகக் களமிறங்கியுள்ளார். அவர்தான் ஸ்ரீதர்.

திரைக்கு இவர் புதியவர் அல்ல. பல படங்களில் ஒற்றைப் பாடலுக்கு ஆடி அறிமுகமானவர்தான் ஸ்ரீதர்.

Dance Master Sridhar turns hero in Pokkiri Mannan

இவர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘போக்கிரி மன்னன்'. இதில் ஸ்ரீதருக்கு ஜோடியாக ஸ்பூர்தி நடித்திருக்கிறார். மயில்சாமி, சிங்கம்புலி, ரமேஷ் ரெட்டி ஆகியோரும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை ராகவ் மாதேஷ் இயக்கியிருக்கிறார். இந்திரவர்மன் இசையமைத்துள்ளார்.

இப்படம் குறித்து ஸ்ரீதர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நான் இதுவரை 200 படங்களுக்கு மேல் நடனம் அமைத்திருக்கிறேன். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய ஐந்து மொழி படங்களிலும் பணியாற்றியிருக்கிறேன். போலி மது பற்றிய படம் இது. நான் இதற்குமுன் பாலசந்தரின் ‘பொய்' படத்தில் நடித்திருக்கிறேன்.

நடிப்பது மிகவும் கடினம். ஆனால் இந்த படத்தில் வித்தியாசமான கதாபாத்திரம் அமைந்ததால் நடிக்க சம்மதித்தேன். இப்படத்திற்கு நானே நடனம் அமைத்திருக்கிறேன். எல்லாருக்கும் பிடிக்கும் விதமாக இப்படத்தின் நடனமும் படமும் இருக்கும். படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது," என்றார்.

 

Post a Comment