சமீபத்தில் தொலைகாட்சி முதல் ஆன்லைன் வரை நடிகர் பிரகாஷ் ராஜ் நடித்த ஒரு விளம்பரம் பெரும் சர்ச்சையை கிளப்பி கொண்டு இருக்கிறது. டீசர் எனப்படும் இத்தகைய விளம்பரம், எந்த பிராண்டுக்காக உருவாக்கப்பட்டது என்பதை அறிய முடியவில்லை.
அந்த விளம்பரத்தில் கல்யாண வயதில் உள்ள பெண்களை அப்பெண்ணின் பெற்றோர்கள் டென்ஷன் என குறிப்பிடுவதும் அதற்க்கு பிரகாஷ் ராஜ் 'கல்யாண வயசுல பொண்ணுங்க இருந்தாலே டென்ஷன் தானே' என கூறுவதைப் போல் அமைந்துள்ளது.
இந்த விளம்பரம் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ஏனைய மக்களால் விமர்சிக்கபட்ட வண்ணம் உள்ளது. 'கல்யாண வயசுல பெண்கள் இருந்தால் உண்மையில் பெற்றோர்களுக்கு டென்ஷன் தானே' என்பதை ஆதரிப்பது போல் ஒரு சாராரும், பெண்களை டென்ஷன் என எப்படிக் குறிப்பிட முடியும் என ஒரு சாராரரும் காரசார விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆகஸ்ட் 15 அன்று இந்த விளம்பரம் முழுமையாக வருகிறது. அன்று தெரியும் யார் சொல்வது சரி என்று!
Post a Comment