ஆகஸ்ட் மாதம் வருகிறது அரவான்
2/24/2011 2:50:35 PM
அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரிக்கும் படம், 'அரவான்'. ஆதி, பசுபதி, தன்ஷிகா, அர்ச்சனா கவி நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, சித்தார்த். பாடல்கள்: நா.முத்துக்குமார், விவேகா. கதை, சு.வெங்கடேசன். வசந்தபாலன் இயக்குகிறார். 18ம் நூற்றாண்டில் நடப்பது போன்ற கதை. வெங்கடேசன் எழுதிய 'காவல் கோட்டம்' கதையின் சில பாகங்கள் படமாக உருவாகிறது. பின்னணி பாடகர், கார்த்திக், இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். படத்தை ஆகஸ்ட்டில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
Source: Dinakaran
Post a Comment