பதினைந்தாம் நூற்றாண்டு உறைவாள்
2/24/2011 2:39:41 PM
'மல்லி', 'டெரரிஸ்ட்' உட்பட சில படங்களை இயக்கிய ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், 'உருமி' என்ற படத்தை தமிழ், மலையாளத்தில் இயக்குகிறார். இதில் பிருத்விராஜ், ஜெனிலியா ஜோடியாக நடிக்கின்றனர். 15ம் நூற்றாண்டில் கேரள மாநிலம் கப்பாட் என்ற இடத்துக்கு போர்ச்சுக்கீசியரான வாஸ்கோ ட கமா வந்தார். அவரை கொலை செய்ய இளைஞர்கள் குழு சதி செய்கிறது. இதை சுற்றி கதை செல்கிறது. இளைஞர் குழு தலைவராக பிருத்விராஜ் நடிக்கிறார். போர்ச்சுக்கீசிய இளவரசியாக ஜெனிலியா நடிக்கிறார். தமிழில் ‘பதினைந்தாம் நூற்றாண்டு உறைவாள்’ என்ற பெயரில் டப் ஆகிறது. இப்படத்தின் டிரெய்லர் கேரளாவில் வெளியிட்டுள்ளனர்.
Source: Dinakaran
Post a Comment