ரஜினி நலம் பெற திருச்சூர் கோயிலில் 101 தேங்காய் உடைத்த இஸ்லாமிய ரஜினி ரசிகர்!

|

Tags:



திருவனந்தபுரம் : ரஜினிகாந்த் நலம் பெற்றுத் திரும்ப வேண்டும் என்று வேண்டி, திருச்சூர் கோவிலில் ஒரு இஸ்லாமிய ரஜினி ரசிகர் 101தேங்காய்களை உடைத்து வேண்டினார்.

படையப்பா முபாரக்

கேரள மாநிலம் திருச்சூர் ஓடக்காடு பகுதியை சேர்ந்துர் முபராக். இவர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர். லாட்டரி சீட்டு விற்பனை செய்து வரும் முபராக் ரஜினிகாந்த் மீதுள்ள திரைப்பற்று காரணமாக தனது பெயரை படையப்பா முபராக் என்று மாற்றிக் கொண்டதுடன் தனது லாட்டரி கடைக்கும் ரஜினிகாந்த் நடித்த படப்பெயரான பாபா பெயரை வைத்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரஜினிகாந்தை நேரில் சந்தித்த படையப்பா முபராக் அவரிடம் இருந்து உதவிகளை பெற்றுள்ளார். இதனால் ரஜினிகாந்த் மீது மிகுந்த மரியாதையும், அன்பும் கொண்டவராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் உடல் நிலை பாதிப்பால் சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கும் தகவல் படையப்பா முபராக்கை பெரிதும் பாதித்தது. அவர் பள்ளி வாசலுக்கு சென்று ரஜினிக்காக தொழுகை நடத்தினார்.

மேலும் கடந்த 21ம்தேதி திருச்சூர் வடக்க நாதர் கோயிலுக்கு சென்ற படையப்பா முபராக் ரஜினிகாந்த பூரண நலம் பெற வேண்டி 101 தேங்காய்களை உடைத்தார்.

நேற்று இரண்டாவது முறையாக வடக்கநாதர் கோயிலுக்கு சென்ற அவர் 101 தேங்காய்களை உடைத்ததுடன் சிறப்பு வழிபாடுகளையும் நடத்தினார்.

 

Post a Comment