6/2/2011 3:36:34 PM
தெலுங்கில் ‘ஜும்மண்டி நாதம்’ படம் மூலம் அறிமுகம் ஆனவர் டாப்ஸி. இப்படத்தை மஞ்சு லட்சுமி தயாரித்தார். இப்போது தான் தயாரிக்கும் படத்தில் நடிக்க டாப்ஸியை லட்சுமி கேட்டிருக்கிறார். இதில் நடிக்க மறுத்துவிட்டாராம் டாப்ஸி. ஏற்கனவே லட்சுமியின் படத்தில் நடிக்க டாப்ஸி ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தெலுங்கு நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கத்தில் டாப்ஸி மீது லட்சுமி புகார் அளித்திருக்கிறார். எப்படியும் டாப்ஸியை இதில் நடிக்க வைப்பதென அவர் முடிவு செய்துள்ளாராம். இதுவரை தெலுங்கு நடிகர் சங்கத்தில் உறுப்பினராக டாப்ஸி சேரவில்லை. இப்ப¤ரச்னை காரணமாக நடிகர் சங்கத்தின் தயவு தேவைப்படுவதால் அவர் சங்கத்தில் உறுப்பினராக சேர முடிவு செய்துள்ளாராம். ‘கால்ஷீட் பிரச்னை காரணமாகவே லட்சுமியின் படத்தில் நடிக்கவில்லை’ என டாப்ஸி தரப்பில் கூறப்பட்டுள்ளது.
Post a Comment