3 பருவங்களில் படமான தாண்டவக்கோனே

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

3 பருவங்களில் படமான தாண்டவக்கோனே

7/2/2011 10:24:59 AM

அம்பீயன்ஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் பிரபாகர் சீனிவாசகம் தயாரிக்கும் படம், 'தாண்டவக்கோனே'. சஞ்சய், நந்தகி, சம்பத், கஞ்சா கருப்பு நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, பானு முருகன். இசை, இளையராஜா. பாடல்கள்: வாலி, முத்துலிங்கம், நா.முத்துக்குமார், சினேகன். சீமான் உதவியாளர் சுப்பு சுஜாதா இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது: விதி சார்ந்த கதையான இதில், சராசரி மனிதனுடைய வாழ்வை, இதுவரை ரசிகர்கள் பார்த்திராத கிளைமாக்ஸ் மூலம் சொல்லியிருக்கிறேன். படத்தை முழுமையாக பார்த்த பிறகு பாடல்களை உருவாக்கினார் இளையராஜா.

மனிதனுடைய வாழ்வில் அம்மாவின் மரணம் எந்தளவு பாதிப்பு ஏற்படுத்தும், பிறகு அவனுடைய வாழ்க்கை எப்படி அமையும் என்பதை சொல்லும், 'நீரால் உடல் கழுவி நித்த நித மூவேளை சோறால் குடல் கழுவும்' என்ற பாடலை இளையராஜா சிறப்பாக எழுதியுள்ளார். இதை மாணிக்க விநாயகம் பாடியுள்ளார். மேலும், இளையராஜா பாடிய 'காட்டுவழி துன்பம் இல்லை. கல்லும்முள்ளும் தொல்லை இல்லை' பாடலும் ரசிகர்களிடம் வரவேற்பு பெறும். குரங்கனி மலைப்பகுதிகளில், இயற்கை வெளிச்சத்தில் காட்சிகளை படமாக்கினோம். கதைக்கு முக்கியம் என்பதால் பனிக்காலம், வெயில் காலம், மழைக்காலம் ஆகிய மாறுபட்ட காலங்களில் படப்பிடிப்பு நடத்தி முடித்தோம். அடுத்த மாதம் படம் ரிலீசாகிறது.

 

Post a Comment