இளம்பெண் கொலை வழக்கு : அரியானா டிஜிபியிடம் நிலா விளக்கம்!

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
இளம்பெண் கொலை வழக்கு : அரியானா டிஜிபியிடம் நிலா விளக்கம்!

7/13/2011 12:42:59 PM

இளம்பெண் கொலை வழக்கில் சிக்கியுள்ள நிலா, திடீரென அரியானா டிஜிபியை சந்தித்து விளக்கம் அளித்தார். நடிகை நிலாவின் நிஜ பெயர் மீரா சோப்ரா. டெல்லி அருகே உள்ள குர்கான் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் கொலை வழக்கு தொடர்பாக, நிலாவை போலீசார் தேடி வருகின்றனர். இதுபற்றிய விவரம் வருமாறு: டெல்லியை சேர்ந்தவர் ருச்சி பூட்டன் (28). இவரது கணவர் சுமித் பூட்டன். சமீபத்தில் ருச்சி தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக கணவர் குடும்பத்தினர் தெரிவித்தனர். ஆனால் ருச்சியின் உறவினர்கள், அவரது சாவில் மர்மம் உள்ளதாக தெரிவிக்கின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அப்போது ருச்சியின் டைரி கிடைத்தது. அதில் தனக்கும் கணவருக்கும் அடிக்கடி சண்டை நடப்பது பற்றி எழுதி இருப்பதுடன், நிலாவுடன் கணவருக்கு தொடர்பு இருப்பதாகவும், நிலாவின் அழகுடன் தன்னை ஒப்பிட்டு இழிவுபடுத்துவார் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இதையடுத்து ருச்சியின் சாவுக்கு உடந்தையாக இருந்ததாக, நிலா மீது குர்கான் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் நிலா அரியானா மாநில டிஜிபி மற்றும் போலீஸ் அதிகாரிகளை சந்தித்து விளக்கம் அளித்தார். ருச்சியின் சாவு குறித்து அவர் அளித்த விளக்கத்தை வாக்குமூலமாக போலீசார் பதிவு செய்து கொண்டனர்.




 

Post a Comment